"நான் பதவியில் நீடித்தால் எம்.எல்.ஏ.க்களின் மகன்கள் பதவிபெற முடியாது" - சித்து அதிரடி

தாம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடித்தால், எம்எல்ஏக்களின் மகன்கள் எவரும் தலைவராக வரமாட்டார்கள் என தற்போதைய தலைவர் சித்து தெரிவித்துள்ளார்.
x
தாம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடித்தால், எம்எல்ஏக்களின் மகன்கள் எவரும் தலைவராக வரமாட்டார்கள் என தற்போதைய தலைவர் சித்து தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய அவர், கட்சிக்காக உழைப்பவர்களே தலைவராக வர முடியும் என்றும், மாறாக சலுகை மூலம் தலைவராக யாராவது வர முடிந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் எச்சரித்தார். பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் சரண்ஜித் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சித்துவின் பேச்சு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்