ஒரே நேரத்தில் குவிந்த வேட்பாளர்கள்... வேட்புமனு பரிசீலனையில் தள்ளுமுள்ளு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வேட்புமனு பரிசீலனையில் வேட்பாளர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வேட்புமனு பரிசீலனையில் வேட்பாளர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உதயேந்திரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை என்பதால் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து, வேட்பாளர்களை ஒவ்வொருவராக செல்லக் கூறி போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசார் மற்றும் வேட்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்