இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன" - உத்தரபிரதேசத்தில் ராஜ்நாத்சிங் பிரசாரம்
இந்தியா சொல்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியா சொல்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஆக்ராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்பு இந்தியா தெரிவிக்கும் கருத்துகளை உலக நாடுகள் பெரிதாக எடுத்துக்கொள்ளாது என்றும், ஆனால் இப்போது இந்தியா தெரிவிக்கும் கருத்தைக் உலகம் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மாற்றமடைந்து உள்ளதாக தெரிவித்தார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன தரப்பில் ஒருசிலர் தான் உயிரிழந்தால் ராகுல்காந்தி தெரிவித்ததாகவும், ஆனால் சர்வதேச ஊடகங்கள் 50 சீன வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என செய்தி வெளியிட்டு உள்ளதாகவும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் எல்லைகளை பா.ஜ.க அரசு வலுவாக வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story