குற்றப் பின்னணியை மறைத்தாரா திமுக வேட்பாளர்? - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில், தி.மு.க வேட்பாளர் தனது வேட்பு மனுவில் குற்றப்பின்னணியை மறைத்ததாக, அ.தி.மு.க வேட்பாளர் புகார் அளித்ததால், வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில், தி.மு.க வேட்பாளர் தனது வேட்பு மனுவில் குற்றப்பின்னணியை மறைத்ததாக, அ.தி.மு.க வேட்பாளர் புகார் அளித்ததால், வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 12 வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மாணிக்கம் என்பவர், குற்றப்பின்னணி குறித்து, தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை எனவும், இதனால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது. இதனால் தி.மு.க., அ.தி.மு.கவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Next Story