மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் - கொரோனா நெறிமுறைகளை மீறியதாக புகார்

உத்தர் பிரதேச சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
x
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குபதிவு பிப்ரவரி 10இல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா, மீரட் தாத்ரி உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்து, வாக்கு சேகரித்தார். 

வாக்கு சேகரித்த இடங்களில் எல்லாம் முகக்கவசம் அணியாமலேயே அவர் வாக்கு சேகரித்தார். துண்டு பிரசுரங்களை விநியோகித்த போது எச்சிலால் விரலை தொட்டு நனைத்தபடியே துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். 

இத்தகைய செயல்பாடுகள் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும் எனக் கூறும் சமூக ஆர்வலர்கள், கடந்த வாரம் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், நொய்டா பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த போது, கொரோன வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக அவர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததுள்ளதை ஒப்பிடுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்