நகராட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி

நகராட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் தகவல்.
x
நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் தனது ரசிகர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக பேசிய புஸ்ஸி ஆனந்த், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மகள் இயக்கம் சார்பில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்