"எங்கள் கொள்கை வேறு, பாஜக கொள்கை வேறு" - ஜெயக்குமார் அதிரடி

சாதி, மதம் கடந்ததுதான் திராவிட இயக்கம் என கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், விருப்பம் வேறு, கட்டாயம் வேறு என குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் கொள்கை வேறு, பாஜக கொள்கை வேறு - ஜெயக்குமார் அதிரடி
x
சாதி, மதம் கடந்ததுதான் திராவிட இயக்கம் என கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், விருப்பம் வேறு, கட்டாயம் வேறு என குறிப்பிட்டுள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில், மொழிப்போர் தியாகிகள் உருவப் படங்களுக்கு மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியை கட்டாயப்படுத்தியதால், தமிழகத்தில் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சியாக உள்ளது என்றார். சாதாரண மக்களின் திருமணங்களுக்கு திமுக அனுமதி வழங்குவதில்லை என்ற அவர், கிராம சபை கூட்டத்தை கூட்டாதது ஏன் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்