"திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது"

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற 21 பொருட்கள் வழங்கி, திமுக அரசு, மக்களை ஏமாற்றுவதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
x
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற 21 பொருட்கள் வழங்கி, திமுக அரசு, மக்களை ஏமாற்றுவதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம்  திருக்குளம் பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர், பொங்கல் பரிசு தொகுப்பில் இறந்த பல்லி இருந்ததாக புகார் செய்ததால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பயத்தில், அவரது மகன் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருத்தணியில் நந்தன் குடும்பத்தினரை,  பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது தேமுதிக சார்பில் நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்