நெருங்கும் தேர்தல் - உ.பி.யில் அடுத்தடுத்து விலகும் பாஜக அமைச்சர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பாஜகவில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
x
உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பாஜகவில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்திரப்பிரதேச மாநில ஆயுஷ்துறை அமைச்சர் தரம் சிங் சைனி, பதவியை ராஜினாமா செய்து, பாஜகவில்
இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே கட ந்த இரண்டு நாட்களில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ராஜினாமா செய்த அமைச்சர் தரம் சிங் ஓரிரு நாட்களில் சமாஜ்வாதி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ராஜினாமா தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்