முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

ஆம் ஆத்மி கட்சியில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, பொதுமக்கள், குறுஞ்செய்தி அனுப்பி தெரிவிக்கலாம் என்று அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
x
ஆம் ஆத்மி கட்சியில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, பொதுமக்கள், குறுஞ்செய்தி அனுப்பி தெரிவிக்கலாம் என்று அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.சண்டிகரில் செய்தியாளர் சந்தித்த அவர், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய புதிய முயற்சியை கையாள இருப்பதாக கூறினார். பொதுமக்கள்,   தொலைபேசியில், அழைப்பு விடுத்தோ, அல்லது குறுஞ்செய்தி அனுப்பியும், யார் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதை, வரும்  17ஆம் தேதி 5 மணிக்குள் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். இதில் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் முக்கியமில்லை மக்களுடைய விருப்பம் தான் முக்கியம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். சுதந்திர நாட்டில், முதல் முறையாக, ஒரு கட்சியின் முதல்வர் வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்று, மக்களிடம் கருத்து கேட்பதாக,
தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் வாக்கு சதவீதம் அதிகம் பெற்ற ஆம் ஆத்மி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என கெஜ்ரிவால் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்