வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
x
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  முதற்கட்டமாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த பதிவில், 'பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்