ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க மனு
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அ.தி.மு.க.வின் புதிய விதிகளின் படி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கே.சி பழனிசாமியின் வழக்கை நிராகிரிக்க கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Next Story