பிரதமரின் பஞ்சாப் பயண குளறுபடி : பெரோஸ்பூரில் 3 பேர் கொண்ட குழு ஆய்வு

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு பெரோஸ்பூரை சென்றடைந்துள்ளது.
x
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைக்க ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றார்.
பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்திட்டம் பாதி நேரத்தை செய்யப்பட்டு பிறகு திரும்பி டெல்லி வந்தடைந்தார். பாதுகாப்பு குளறுபடி பாஜக தரப்பில் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் பஞ்சாப் மாநில அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தாலும் நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் கொண்ட குழு பாதுகாப்பு செயலாளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையில், விரைவில் அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த குழு பெரோஸ்பூர் இன்று சென்றடைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்