முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஹசனில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடி வந்தனர். மேலும், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹசனில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே, ராஜேந்திர பாலாஜி எங்கே என்பது குறித்து அவரது நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பலரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனிடம் விசாரணை நடத்தினர்.

முன்னதாக முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த முன் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்