பல்கலை. வேந்தராக தொடர விரும்பவில்லை - கேரள ஆளுநர் கருத்தால் சர்ச்சை

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தொடர விரும்பவில்லை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
x
கேரள மாநிலத்தில் ஆளுநரான ஆரிப் முகமதுகான் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார். 

கேரள பல்கலைக்கழகம் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க வேந்தர் என்ற முறையில் ஆரிப் முகமது கான் சிபாரிசு செய்ததாகவும், அதை கேரள அரசு நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஆரிப் கான், சிபாரிசுகளை பொறுத்தவரை பல்கலைக்கழக அதிகார வரம்புக்கு உட்பட்டும், வேந்தர் என்ற அதிகார வரம்புக்கு உட்பட்டும் செய்யப்படுகிறது என கூறினார். 

சட்டத்தை உருவாக்கியவர்களே அதை உடைத்தால், வேந்தர் பொறுப்பில் தொடர்வதில் அர்த்தம் இல்லை என கூறியுள்ளார். மேலும், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து தம்மை விலக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தொடர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்