"கட்டுப்படுத்த நினைத்தால் போராடுவோம்" - பிரியங்கா காந்தி தலைமையில் பிரமாண்ட மாரத்தான்
கட்டுப்படுத்த நினைத்தால் பெண்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என லக்னோ மாரத்தான் மூலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில், பெண்களின் உரிமையை கையிலெடுத்த பிரியங்கா காந்தி "நான் பெண், போராடுவேன்" என பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக லக்னோவில் பெண்களுக்கான மாரத்தான் நடத்த மாநில அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அரசு மறுப்பு தெரிவித்த போதிலும், பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ஜான்சியில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் மாரத்தானில் பங்கேற்றனர்.
Next Story