கோவா தேர்தல் : "முடிவு செய்துவிட்டோம் - பின்வாங்க போவதில்லை" - மம்தா
பாஜாகவிற்கு மாற்று திரிணாமுல் கூட்டணி தான் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாஜாகவிற்கு மாற்று திரிணாமுல் கூட்டணி தான் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவா சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது அவர்
தாங்கள் இங்கு ஓட்டுக்களை பிரிக்க வரவில்லை என்றும் பாஜகவிற்கு மாற்று திரிணாமுல் கூட்டணி தான் என்றும் கூறினார். தங்களை ஆதரிக்க விரும்புவோர் அவர்களின் முடிவுப்படி ஆதரிக்கட்டும் என்றும் பேசினார். திரிணாமுல் கூட்டணி பாஜகவிற்கு எதிராக போராடுவதாக குறிப்பிட்ட மம்தா, இதில் ஏற்கனவே தாங்கள் முடிவு செய்துவிட்டதாகவும், ஒருபோதும் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் அவர் கட்சியினர் மத்தியில் பேசினார்.
Next Story