பிரசாரத்திற்கு தயாராகும் பிரியங்கா காந்தி - அடிமட்ட தொண்டர்களை மையப்படுத்தி வியூகம்

5 மாதங்களில் நடைபெறவிருக்கும் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடங்கவிருக்கிறார்.
பிரசாரத்திற்கு தயாராகும் பிரியங்கா காந்தி - அடிமட்ட தொண்டர்களை மையப்படுத்தி வியூகம்
x
5 மாதங்களில் நடைபெறவிருக்கும் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடங்கவிருக்கிறார். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம். 2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைந்த பின்னர் பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரசை காப்பாற்றும் நட்சத்திரமாக பார்க்கப்படும் பிரியங்கா காந்தி, 2019 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநில கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக அரசியலில் இறங்கினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அவருடைய அரசியல் பயணம் இருந்தாலும், அப்போது தொண்டர்களிடம் பேசிய பிரியங்கா, 2022 உத்தரபிரதேச தேர்தல்தான் தமது இலக்கு எனக் கூறியிருந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் காங்கிரஸ் சோபிக்காத நிலையில், நடைபெறவிருக்கும் 2022 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு பிரியங்கா காந்தி கைக்கொடுப்பாரா என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 


Next Story

மேலும் செய்திகள்