"பாமகவின் ஓட்டு சதவீதத்தை நிரூபிப்போம்" - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பாமகவின் ஓட்டு சதவீதத்தை நிரூபிப்போம் என அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் ஓட்டு சதவீதத்தை நிரூபிப்போம் - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
x
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் பாமக நிறுவனர் ராமதாஸ் காணொலியில் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக  காப்பாற்றவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். சரியான தலைமை இல்லாதால்,  அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைகிறதே தவிர பாமகவிற்கு எந்த பலனும் இல்லை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். எனவே, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்