"ரேஷனை வீடுகளுக்கே சென்று கொடுங்கள்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக ரேஷன் பொருட்களை நேரடியாக பயனாளியின் வீட்டுக்கே கொண்டுசென்று கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கோரியுள்ளார்.
x
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக ரேஷன் பொருட்களை நேரடியாக பயனாளியின் வீட்டுக்கே கொண்டுசென்று கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கோரியுள்ளார். மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பேரூராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட அவர், தினசரி 35 ஆயிரம் பாதிப்பு பதிவாகி வந்த நிலையில் தற்போது, ஊரடங்கு நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வருவது  சற்று ஆறுதல் அளிப்பதாக கூறினார். தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகவும், அதை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்