"12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - எல்.முருகன்

மத்திய அரசின் ஆலோசனைகளின் படி, மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்த்திலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசின் ஆலோசனைகளின் படி, மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்த்திலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அடையாறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார். அத்துடன் மத்திய அரசு சார்பாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், திமுக தொடர்ந்து குறை கூறி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துகளையும் விரைவில் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்