நிவாரணப் பணி புரிந்தோருக்கு வீரவணக்கம்" - மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது என்றும், அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
x
மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது என்றும், அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.77-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது, புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கூறிய மோடி,... புயல்களால், இழப்பை சந்தித்த நபர்களுடன் தேசம் துணை நிற்பதாக தெரிவித்தார்.கொரோனா 2-வது அலையால் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததாகவும்,நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில், டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்ததாகவும் மோடி கூறினார்.மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் டேங்கர் லாரி ஓட்டுநர்கள், நோயாளிகளின் கண்களுக்கு கடவுளின் தேவதை போல தெரிவதாகவும்,ஆக்சிஜனை துரிதமாக  கொண்டு சேர்ப்பதில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிக முக்கிய பங்காற்றியதாகவும் கூறினார்.ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை பெண்கள் இயக்கியதை நினைத்து ஒவ்வொரு பெண்களும் பெருமைப்படுவதாகவும் அவர் பேசினார்.குறுகிய காலத்தில் இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்