திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்த வந்த பாதை

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்த வந்த பாதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்த வந்த பாதை
x
1953 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் ஸ்டாலின். தந்தையின் அரசியல்-கலைத்துறை ஆளுமை காரணமாக, இளம் வயதிலேயே நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார் ஸ்டாலின். இவர் நடித்த முதல் நாடகமான 'முரசே முழங்கு' வெற்றிவிழா கண்டது. அதைத் தொடர்ந்து 'திண்டுக்கல் தீர்ப்பு', 'நீதி தேவன் மயங்குகிறான்', 'நாளை நமதே' என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களில் நடித்துள்ளார். இதேபோல, திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், 'ஒரே இரத்தம்', 'மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் 'குறிஞ்சி மலர்' என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.

மாணவ பருவத்திலேயே அரசியல் செயல்பாட்டில் கால்பதித்த ஸ்டாலின், ஆயிரத்து 973ஆம் ஆண்டு திமுகவின் பொது குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976ம் ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்த காரணத்தால், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்டாலின். சிறையில் கிடைத்த அனுபவங்கள் மூலம் படிப்பினை கற்ற ஸ்டாலின், அடுத்தக்கட்ட அரசியல் பிரவேசத்துக்கு தன்னை மன ரீதியாக தயார்படுத்திக் கொண்டார். 1982ஆம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளரான ஸ்டாலின், Card-4 முதல்முறையாக1984ம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 1989ல் நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக சட்டமன்றத்துக்கு சென்றார். 1996ஆம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார். 2001ல் இரண்டாவது முறையாக சென்னை மேயராக தேர்வானார் ஸ்டாலின். 

2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கபட்டு ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சர் ஆனார். 2008ல் திமுக பொருளாளரான ஸ்டாலின், தனது சிறப்பான செயல்பாட்டால், Card-10 தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 1984 முதல் 2016 வரை, 8 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதில் 6 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்து வருகிறார் ஸ்டாலின். இப்படி கட்சியிலும் ஆட்சி பொறுப்புகளிலும் படிப்படியாக உயரம் தொட்ட  ஸ்டாலின், 2017ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். 2018ல் கருணாநிதி மறைவுக்கு பின், திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே செயல் தலைவராக செயல்பட்ட அனுபவம், தலைவரான பின் கட்சியில் அதிரடியான முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு உதவியது.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் அரசியலும் அவருக்கு கை கூடியது. கருணாநிதி மறைவுக்கு பின், 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று தனது ஆளுமையை உறுதி செய்தார். அதன் பின்னர் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட ஸ்டாலின் பெரும் கூட்டணிக்கு தலைமை வகித்தார். ஆளுங்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணிக்கு சவாலாக உருவெடுத்தார்.

தந்தி டிவி செய்திகளுக்காக விவேகானந்தன்...

Next Story

மேலும் செய்திகள்