"நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு" - சோனியாகாந்தி குற்றம்சாட்டல்

மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சோனியாகாந்தி குற்றம்சாட்டல்
x
மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் குறித்து சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். காணொலி காட்சி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய சோனியா காந்தி, முதலில், தடுப்பூசி போடும் பணியை நாட்டில் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பிறகு தான் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், இலவசமாக கொடுக்க வேண்டும் என கூறினார். கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நிலவரத்தை அனைத்து மாநில அரசுகளும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய சோனியாகாந்தி, மோடி அரசு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, தற்போது,  தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்