திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு
x
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு வரும் 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீ காளஹஸ்தியில் சந்திர பாபு நாயுடு வாக்கு சேகரித்தார். அப்போது, ஆந்திர மாநில தலைநகர் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக, விமர்சித்தார். மேலும், திருப்பதியின் புனிதத்தை காப்பாற்ற தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்