ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கிற்குத் தடை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கிற்குத் தடை
x
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட  வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கருத்தரங்கு ஒன்றில் பட்டியல் இனத்தவர் குறித்து கருத்துத் தெரிவித்ததாகக் கூறி ஆர்.எஸ். பாரதி மீது, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில்  அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுதலை ஆனார்.சென்னையில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரப்பட்டிருந்தது.முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்து புகார் அளித்து வருவதால் பழி வாங்கும் நோக்குடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.அரசியல் உள்நோக்கம் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கேட்கப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், நீதிபதி இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்