வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - ராகுல் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், நாட்டில் பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, தற்கொலைக்கே வழிவகுக்கும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - ராகுல் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு
x
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், நாட்டில் பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, தற்கொலைக்கே வழிவகுக்கும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்ததுடன், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறிய ராகுல் காந்தி,3 வேளாண் சட்டங்களும் உணவு தானிய பதுக்கலுக்கே வழிவகுக்கும் என்றும்,இதன் மூலம் நாட்டில் பஞ்சம், வேலை வாய்ப்பின்மை, தற்கொலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயல்படுவதாக சாடிய ராகுல் காந்தி,இந்த சட்டங்கள் மூலம், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்க தொழிலதிபரை அணுக வேண்டிய சூழல் வரும் என குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் 4 நண்பர்களுக்காகவே வேளாண்  சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக விமர்சித்த ராகுல் காந்தி, பெரு முதலாளிகளுக்காகவே பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியை பிரதமர் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினார்.வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகள், ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டார்கள் எனக்கூறிய ராகுல் காந்தி, இந்த போராட்டம் நாட்டுக்கான போராட்டம் என்று குறிப்பிட்டார்.ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் கடும் அமளி நிலவியது...அமளியை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கூறினார்...



Next Story

மேலும் செய்திகள்