இளவரசி, சுதாகரன் விடுதலை எப்போது?

சொத்து வழக்கில் சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இளவரசி மற்றும் சுதாகரன் விடுதலை தாமதமாகியுள்ளது. ஏன் இந்த தாமதம்? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
இளவரசி, சுதாகரன் விடுதலை எப்போது?
x
சொத்து வழக்கில் சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இளவரசி மற்றும் சுதாகரன் விடுதலை தாமதமாகியுள்ளது. ஏன் இந்த தாமதம்? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.தமிழக அரசியலில் புயலை கிளப்பிய இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.18 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில், நால்வரும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார்.தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நால்வரையும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.இதை எதிர்த்து தமிழக ஊழல் தடுப்பு அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது.ஜெயலலிதா உயிரிழந்ததால் அவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட, மற்ற மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நால்வரும் அடைக்கப்பட, தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.ஆனால் இவரோடு இணைந்து ஒரே நாளில் கைதான இளவரசி, சுதாகரனின் விடுதலை தாமதமாகியுள்ளது.இதற்கு காரணம், சசிகலா 90களில் கைதான போதும், அதற்கு பிறகு 2014ல் தீர்ப்பு வழங்கிய போதும், சிறையில் இருந்த 21 நாட்களும் தண்டனை காலத்தில் குறைக்கப்பட்டது.ஆனால் இந்த வழக்கில் இளவரசி, சுதாகரன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நாட்கள் வெவ்வேறாக உள்ளன.குறிப்பாக 1997ல் சசிகலா கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இளவரசியும், சுதாகரனும் கைது செய்யப்பட்டதால் விடுதலை தேதி வேறுபடுகிறது.இதனால் இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதி விடுதலை ஆவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுபக்கம்  சுதாகரனோ அபராத தொகையை கட்டாத காரணத்தால் விடுதலை தள்ளி போவதாக கூறப்படுகிறது.இதனால் சுதாகரன் விடுதலை எப்போது என்பது இதுவரை அறியப்படவில்லை.1996ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு



Next Story

மேலும் செய்திகள்