தேர்தல் கூட்டணி : தேமுதிக ஆலோசனை - அதிமுக கூட்டணியில் நீடிக்குமா தேமுதிக?

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
x
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 234 தொகுதி பொறுப்பாளர்கள், 39 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் 6 மண்டல பொறுப்பாளர்கள் என 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கூட்டணி குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துதல் மற்றும் பொதுக்குழு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்