3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை

ஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை
x
ஆவடி சட்டமன்ற தொகுதியில்  திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 7 தமிழர் விடுதலையில் வெகு விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை என்றும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்