இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முயற்சி - வைகோ கண்டனம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையும் என்ற மத்திய அரசின் வாதத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முயற்சி - வைகோ கண்டனம்
x
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையும் என்ற மத்திய அரசின் வாதத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இடஒதுக்கீடு வழங்கினால் அது கல்வி தரத்தை பாதிக்கும் என்று கூறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பதை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் மூலம் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுள்ள 7.5சதவீத இடஒதுக்கீட்டையும் பறிக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு துடிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பி வரும் பாஜக அரசின் மனப்பான்மை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளதாக தெரிவித்துள்ள வைகோ,சமூகநீதிக் கோட்பாட்டை நீர்த்துப்போக செய்து, இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக்கட்ட முயற்சிப்பதாக மத்திய பாஜக அரசு ​ மீது குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்