சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு

தி.மு.க சார்பில் வரும் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சமத்துவ பொங்கல் விழாவில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு
x
தி.மு.க சார்பில் வரும் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற  உள்ள சமத்துவ பொங்கல் விழாவில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சனாதனப் பிரிவினைகளை அகற்றி,சமூகநீதியை போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்  பண்பாட்டுத் திருவிழாவைச் சமத்துவப் பொங்கல் வைத்து இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வரும் 13ஆம் தேதி பொன்னேரி தொகுதியிலும், 14ஆம் தேதி ஆவடி தொகுதியிலும் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் தாம் பங்கேற்க உள்ளதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.ஆட்சியில் இருந்தால் மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்