351 கி.மீ. தொலைவுக்கான பிரத்யேக சரக்கு ரயில் பாதை - காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குர்ஜா மற்றும் பாவூபூர் இடையே 351 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
351 கி.மீ. தொலைவுக்கான பிரத்யேக சரக்கு ரயில் பாதை - காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x
குர்ஜா மற்றும் பாவூபூர் இடையே 351 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐந்தாயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் 351 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டு உள்ள இந்த வ​ழித்தடத்தால், அந்த பகுதியில் உள்ள அலுமினியம், பால் பதப்படுத்தும் தொழில், ஜவுளி, அச்சுத்துறை, கண்ணாடி பொருட்கள் தொழில், மட்பாண்ட பொருட்கள், ஹிங் உற்பத்தி மற்றும் பூட்டுகள்  வன்பொருள் உற்பத்தி தொழில் துறையினருக்கு இந்த பாதை பேரூதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர, டெல்லி, கான்பூர் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், அதிக அளவில் ரயில்களை வேகமாக இயக்க இது இந்திய ரயில்வே துறைக்கு உதவியாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்