காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து
x
காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டுவிட்டரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்து உள்ளார். அதில், தேசத்தின் குரலை ஓங்கி ஒலிக்க காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே உறுதி பூண்டுள்ளதாகவும், உண்மையும் சமத்துவத்துமும் தொடர, எடுத்துக்கொண்ட உறுதிமொழியை வலியுறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி, இந்தியாவில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

ராகுல்காந்தி பாட்டியை பார்க்க இத்தாலி சென்றுள்ளார்" - காங். பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ராகுல்காந்தி இத்தாலிக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல்காந்தி தனது பாட்டியை பார்க்க சென்றுள்ளார் என்றும், தனிப்பட்ட விஷயங்களுகாக பயணம் மேற்கொள்ள அனைவருக்கும் உரிமை எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்