"மம்தா பானர்ஜி மட்டும் தனி ஆளாக அக்கட்சியில் நீடிப்பார்" - அமித்ஷா

திரிணாமூ​ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய நிர்வாகி சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி மட்டும் தனி ஆளாக அக்கட்சியில் நீடிப்பார் - அமித்ஷா
x
தமிழகத்தை போல், மேற்கு வங்கத்திலும் 2021-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் அக்கட்சியின் மூத்த தலைவர்களும் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றார். 

அங்கு, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பெலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து, அமித்ஷா மதிய உணவு அருந்தினார். 

பின்னர், மிட்னாபூரில், நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் அமித்ஷா பங்கேற்றார். இந்த பேரணியில், திரிணாமூல் காங்கிர​ஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நிர்வாகியுமான சுவேந்து அதிகாரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.சுனில் மோன்டல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் 9 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். 

இந்த பேரணியில் உரையாற்றிய அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் தவறான ஆட்சி, ஊழல் ஆகியவற்றால் திரிணாமூல் காங்கிரஸ் விரைவில் காலியான கூடாரம் ஆகி விடும் என்றார். வருகிற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தனி ஒரு ஆளாக மட்டுமே அந்த கட்சியில் இருப்பார் எனவும் அமித்ஷா கூறினார். 

ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்கத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்