"அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் காத்திருங்கள்"- ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகரன் அறிக்கை
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த தகவல்கள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகரன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இடம் பெற்றிருக்கும் கட்சியின் பெயரும், சின்னமும் மக்கள் மன்றத்திற்குரியது என செய்திகள் உலா வருவதாக தெரிவித்துள்ளார்.ஆனால், தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story