"பா.ஜ.க. தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகள்" - ஜெ.பி.நட்டா

பா.ஜ.க. தவிர நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகள் என்று ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகள் - ஜெ.பி.நட்டா
x
2024  பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா 100 நாள் சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக நான்கு நாள் பயணமாக உத்தராகண்ட் சென்றுள்ள ஜெ.பி.நட்டா, நேற்று வாக்குச் சாவடி முகவர்கள் மத்தியில் பேசும் போது, நாட்டில் பா.ஜ.க. தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப அரசியல் நடத்தி வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் பா.ஜ.க. ஒரு குடும்பமாக செயல்பட்டு வருவதாகவும் நட்டா தெரிவித்துள்ளார். மதம், இனம், சாதி அடிப்படையில் யாரையும் பிரித்துப் பார்க்காத, கொள்கை அடிப்படையிலான கட்சி பா.ஜ.க. என்றும் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடி அளவில் பணியாற்றும் தொண்டரும், கட்சியின் உயர் பொறுப்புக்கு பா.ஜ.க.வில் மட்டுமே வரமுடியும் எனவும், நமது கட்சியின் சிறப்பே தொண்டர்கள் சக்தி தான் எனவும், அந்த சக்தி வாக்குச்சாவடி குழுக்கள் மூலமாக கட்டி எழுப்பப்பட்டது எனவும் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதில், வாக்குச் சாவடி அளவிலான குழுக்களின் பங்களிப்பு அளப்பறியது என நட்டா தெரிவித்துள்ளார். வாக்கு சாவடிகளை வென்றால், கட்சி வென்றது என்பது அர்த்தம், அந்த வகையில் கட்சியை அனைவரும் இணைந்து செயல்பட்டு பலப்படுத்த வேண்டும் என கட்சியினருக்கு ஜெ.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்