சாதிப் பெயர்களுக்கு பதிலாக மாற்றுப் பெயர்கள் - மராட்டிய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் பாராட்டு
குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கும் மராட்டிய அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கும் மராட்டிய அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த முடிவை எடுத்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துகளையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாய சீர்திருத்த சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு என்றும், அவர்களின் சிந்தனைகளுக்கு காலத்திற்கேற்ற செயல்வடிவம் தரும் வகையில், முற்போக்கான முடிவினை எடுத்துள்ளது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் முழுமையும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான பெயர்களைத் தாங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் எனவும், அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப்படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளதையும் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
Next Story