கேரள உள்ளாட்சி தேர்தலில் 74,899 வேட்பாளர்கள்- கொரோனா தொற்று உள்ளவர்களும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்கும் இந்த தேர்தலில் மொத்தம் 74 ஆயிரத்து 899 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் சிறப்பு அஞ்சல் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்கள் மற்ற வாக்காளர்கள் வாக்களித்து விட்டு வெளியேறிய பிறகு வாக்குச்சாவடிக்கு வர அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வருவோருக்கு சிறப்பு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
Next Story