சொந்த ஊரில் அகமது ப​ட்டேல் உடல் நல்லடக்கம் - ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது ப​ட்டேல் உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.
சொந்த ஊரில் அகமது ப​ட்டேல் உடல் நல்லடக்கம் - ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு
x
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது ப​ட்டேல் உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். கொரோனா தொற்றால் ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த அகமது பட்டேல் நேற்று அதிகாலை காலமானார். இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது உள்ளத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்றிரவு குஜராத் மாநிலம் பரூச்சிற்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட அவரது உடல் பின்னர் ஆம்புலன்ஸில் அங்கலேஷ்வர் கொண்டு வரப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இன்று காலை அவரது சொந்த ஊரான பிரமனில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகமது பட்டேல் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்