பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாடு - காணொலி மூலம் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ஐ.நா. சபையின் கொள்கைகளை அப்படியே கடைபிடிப்பதில் இந்தியா உறுதி பூண்டு இருப்பதாகவும், இருப்பினும், சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாடு - காணொலி மூலம் நடைபெற்ற  மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
x
பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாடு இன்று நடைபெற்றது. ரஷ்யா தலைமையில், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற  மாநாட்டில், இந்தியா சார்பில் பிரதமர் மோடியும், சீனா அதிபர் ஜி ஜின்பிங்கும், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் பிரதமர் ஜைர் பொல்ஸ்னாரோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா காலகட்டத்திற்கு இடையிலும் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள ரஷ்ய அதிபருக்கு வாழ்த்து கூறினார்.தீவிரவாதம் உலக நாடுகள் முன்பு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்று கூறிய பிரதமர், தீவிரவாதத்தை ஒழிக்க பிரிக்ஸ் நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதில் நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறிய பிரதமர்,அதற்காக இந்தியாவில் பெரிய சீர்திருத்த செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக கூறினார்.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்வது அவசியம் என்றும், அதற்கு பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்