ராணுவ வீரர்களுடன் எல்லையில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
பதிவு : நவம்பர் 14, 2020, 01:36 PM
இந்திய எல்லைப்பகுதியை, ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களுக்கு, ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாடம் கற்பித்ததாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம், லோங்கேவாலா போஸ்ட்டில் உள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்தார். அப்போது ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.உயர்ந்த பனிமலையோ, சூரியன் சுட்டெரிக்கும் பாலைவனமோ, எதுவாக இருந்தாலும் ராணுவ வீரர்களின் பணி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார். சர்வதேச அளவில், தங்களது நாட்டின் எல்லைகளை விரிவுப்படுத்தும் எண்ணம் அதிகரித்துள்ளதாகவும் இது தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி புகார் கூறினார். இது போன்ற  மனம் பிறழ்ந்த, 18 ஆம் நூற்றாண்டு சிந்தனையை இந்தியா எப்போதும் எதிர்க்கும் என, பிரதமர் மோடி  தெரிவித்தார். எல்லைப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்களை ஓட ஓட விரட்டியதாகவும், இந்தியா, ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறையில் தன்னம்பிக்கையுடன், எதிரிகளை முறியடித்து  தக்க பதிலடி கொடுத்து வருவதாக சீனாவை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடினார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

414 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

15 views

பிற செய்திகள்

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது

கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

4 views

தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

259 views

கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து, தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

15 views

காசிப்பூரில் தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் - போலீசார் தடுத்து வருவதால் பதற்றம்

பிற்பகல் 3 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ள நிலையில், டெல்லிக்கு நுழையும் பகுதிகளில் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

10 views

இன்று உலக எய்ட்ஸ் நோய் தடுப்பு தினம் - கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.