இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் - திட்டங்களுக்கு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காலை காணொளி மூலமாக நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, சட்லஜ் நதியில் 210 மெகாவாட் லுஹ்ரி முதற்கட்ட நீர் மின் திட்டத்தின் ஆயிரத்து 810 கோடி ரூபாய்க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார். தொலைதொடர்பு , தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் பிரிட்டன் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
======
Next Story