பசி, பட்டினி உடன் நடந்து சென்ற தொழிலாளர்கள்" - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

கொரோனா ஊரடங்கு பரவலின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக, கொளுத்தும் வெயிலில் பசி, பட்டினியுடன் சென்றனர் என ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
பசி, பட்டினி உடன் நடந்து சென்ற தொழிலாளர்கள்  -  ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
x
கொரோனா ஊரடங்கு பரவலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்த தொடங்கிய போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள், நமது சகோதர, சகோதரிகள் கால்நடையாக, கொளுத்தும் வெயிலில் பசி, பட்டினியுடன் சென்றனர் என ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அந்த நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதிஷ்குமார் அரசு, அவர்களின் துயரை துடைக்க முன்வரவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். ஆட்சியில் இல்லாத நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதிஷ்குமார் கூட்டணியின் சாமானிய மக்கள் மீதான பாராமுகத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பியதோடு, அவர்களுக்கு இயன்ற வகையில் உதவியதாகவும் தமது பதிவில்  தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்