ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் குறித்து விசாரணை - ஜித்தன் ராம் மாஞ்சி மீது சிராக் பாஸ்வான் பாய்ச்சல்
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி கோரியுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி நீதி கடிதம் எழுதியுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் மரணத்தில், அவரது மகன் சிராக் பாஸ்வானின் மீது பல்வேறு சந்தேகம் மற்றும் கேள்வி எழுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு கட்சி தேசிய அளவில் இந்த கடிதம் பீகார் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிராக் பஸ்வான், இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும், தனது தந்தைக்கு உடல் நலம் இல்லை என மாஞ்சிக்கு தொலைபேசியில் தெரிவித்த போதும் தனது தந்தையை மருத்துவமனையில் வந்து பார்க்க அவர் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
Next Story