பீகார் தேர்தல் - முழக்கம் வாக்குகளாக மாறுமா?

தேர்தல் களத்தில், மக்களை கவரும் முழக்கங்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகின்றன. பீகார் தேர்தலில் எழும் முழக்கங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பீகார் தேர்தல் - முழக்கம் வாக்குகளாக மாறுமா?
x
பாமரனையும் வசீகரிக்க கூடிய முழக்கங்கள் தேர்தலில் வாக்குகளாக மாறிவிடும். மாயாஜாலமும், மண்ணைக் கவ்வ செய்யும் வேட்டும் அவ்வகை முழக்கங்களில் உள்ளன. நாட்டின் விடுதலை போராட்டங்களின் போது முன்வைக்கப்பட்ட முழக்கங்கள் மாபெரும் சக்தியாக மாறிய வரலாறு உண்டு.
'ஏழ்மையை அகற்றுவோம்' என்ற முழக்கத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த இந்திரா காந்திக்கு எதிராக, 'இந்திரா காந்தியை அகற்றுவோம்'! 'தேசத்தை காப்போம்' என்ற முழக்கம் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது. சரியான முழக்கம் வைத்து வென்ற கட்சிகளும், சரியான முழக்கம் வைக்காது வீழ்ந்த கட்சிகளும் இந்திய ஜனநாயக வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. பீகார் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில், 'நிதிஷ் குமார் ஓகே!' என்ற முழக்கமும்,  பாஜக சார்பில் 'பாஜக தயார், சுய சார்பு பீகார்' என்ற முழக்கமும், தேஜஸ்வி யாதவ் சார்பில் 'புதிய சிந்தனை, புதிய பீகார்!' என்ற முழக்கமும், களத்தில் எதிரொலிக்கின்றன. லோக் ஜன சக்தி கட்சி சார்பில் பீகார் ஃபர்ஸ்ட், பீகாரி ஃபர்ஸ்ட்' என்ற முழக்கமும், காங்கிரஸ் சார்பில், ஆட்சி மாற்றம்! பீகார் மாற்றம்!! என்ற முழக்கமும்,  என்டிஏவை தோற்கடிப்போம்! புதிய பீகாரை உருவாக்குவோம்!! போன்ற முழக்கங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன. தேர்தலில் எதிரொலிக்க தொடங்கியுள்ள இந்த முழக்கங்கள், மக்கள் மனதில் எதிரொலித்து வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்