நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
x
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழல தொடங்கி உள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் நகர்வு  என்ன என்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், போயஸ்தோட்ட இல்லத்தில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்திருந்த ரஜினிகாந்த், ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான கல்லூரி விழாவில், அரசியல் வெற்றிடம் பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்