பீகார் தேர்தல் - பிரதமர் மோடி பிரசாரம்

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி உறுதி பட தெரிவித்துள்ளார்.
x
சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில் உள்ள சசாராம் தொகுதிக்கு உட்பட்ட டெஹ்ரி என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவிற்கு எதிரான போரை பீகார் முன்னெடுத்து செல்கிறது என்று தெரிவித்த பிரதமர் , கொரோனாவிற்கு எதிராக பீகார் தைரியமாக போராடி வருகிறது என்று கூறினார். 

ஜனநாயக திருவிழாவை அனைத்து முன்னெச்சரிக்கையுடன் பீகார் மக்கள் கொண்டாடுகின்றனர் என்று கூறிய பிரதமர், ஏழை மக்களுக்காக கடைசி வரை போராடிய ராம்விலாஸ் பஸ்வான் இழப்பு ஈடுசெய்ய முடியாதுது என தெரிவித்தார். பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பீகார் மக்கள் தயாராகி விட்டனர் என்றும் பேசினார். 

இருளில் இருந்து மீண்ட பீகார் மக்கள் மீண்டும் இருளுக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறிய மோடி, முன்பு இருந்த நிலை பீகாரில் தற்போது இல்லை என சுட்டிக்காட்டினார். பீகார் மக்கள் எந்த அச்சமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்று கூறிய மோடி, சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளாகவும் தெரிவித்தார். பீகாரில் பல ஆண்டுகளாக காட்டாட்சி தர்பார் நடைபெற்று வந்தது என்றும், தற்போது, நிதீஷ் குமாரின்ஆட்சியின் சிறப்புகளை கண்கூடாக காண முடிகிறது என்றும் அவர் பேசினார். 

பல்வேறு அறிக்கைகளும் கருத்துக்கணிப்பு முடிவுகளும், தேசிய ஜனநாயக கூட்டணி, பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினர். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இந்த அரசு எடுத்த முடிவுகளில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது என்பதை இந்த மண்ணிலிருந்து அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்