துணை சபாநாயகருக்கு எதிரான எதிர்க்கட்சிகள் தீர்மானம் - 8 எம்.பி.க்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு

மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டதாக 8 எம்.பி.க்கள் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
x
நேற்று மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்ததுடன், பா.ஜ.க. உறுப்பினர் பேச்சின் அடிப்படையில் துணை சபாநாயகர், வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற முயன்றதாக கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் துணை சபாநாயகர் இருக்​கையில் இருந்த மைக்குகள் சேதப்படுத்தப்பட்டதுடன், மசோதா நகலையும் எம்.பி.க்கள் கிழித்தெறிந்தனர். இதனி​டையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த துணை சபாநாயகர், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

Next Story

மேலும் செய்திகள்