பீகாரில் 3 முக்கிய பெட்ரோலிய திட்டங்கள் - காணொலி மூலம் துவக்கி வைத்தார், பிரதமர் மோடி

பீகாரில் 3 முக்கிய பெட்ரோலிய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் .
x
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் பீகார் மாநிலத்தில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார். அதன்படி,இன்று அந்த மாநிலத்தில் பெட்ரோலியத் துறை சார்பாக 3 முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  இந்த திட்டங்களில் பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டம் மற்றும் இரண்டு எல்.பி.ஜி.கேஸ். சிலிண்டர்கள் நிரப்பும் ஆலைகளும் அடங்கும். இவற்றை பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் எச்.பி.சி.எல். நிறுவனங்கள் அமைக்கின்றன. நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்